செய்தி அறிக்கை: 27.04.2010

செய்தி அறிக்கை: 27.04.2010
சுவிஸில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு

19 வேட்பாளர்கள் போட்டி – மே 2 இல் தேர்தல்!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சுவிஸ் நாட்டில் இருந்து தெரிவு செய்யப்படவேண்டிய பத்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக மே மாதம் 2 ஆம் திகதி நடாத்தப்படுகின்ற தேர்தலில் 7 தேர்தல் தொகுதிகளில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக சுவிஸ் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையாளர் திரு. கார்த்திகேயபிள்ளை ஆனந்தநடராசா (யாழ்ப்பாணம் மற்றும் பெரதெனியா பல்கலைக்கழகங்களின் முன்னாள் விரிவுரையாளர்) அவர்களால் பரிசீலனை செய்யப்பட்டு பின்வரும் வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதியுடையவர்களெனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கடந்த 25.04.2010 ஞாயிற்றுக்கிழமையன்று பேர்ண் நகரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வேட்பாளர்கள் அறிமுகம் இடம் பெற்றதோடு, இவர்கள் வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டமைக்கான உறுதிப்பத்திரமும் தேர்தல் ஆணையாளரால் கையளிக்கப்பட்டது.

சுவிஸில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்; விபரங்கள் பின்வருமாறு:

தேர்தல் தொகுதி 1
 
Bern, Solothurn - 2 பிரதிநிதிகள்

Krishnaswamy  Thileepan  கிருஷ்ணசாமி திலீபன்
Puthirasigamani   Suganya  புத்திரசிகாமணி சுகன்யா
Selvaratnam  Suresh  செல்வரத்தினம் சுரேஸ்

Virakathi  Suntharalingam 
  வீரகத்தி சுந்தரலிங்கம்

தேர்தல் தொகுதி 2

Zurich, Schaffhausen, Thurgau - 2 பிரதிநிதிகள்

Markandu  Devarajah   மார்க்கண்டு தேவராஜா
Selvarajah   Jeyam  செல்வராஜா ஜெயம்
Alvapillai Thayanath  ஆழ்வாபிள்ளை தயானந்
Visvalingam  Ilango   விஸ்வலிங்கம் இளங்கோ

Ramanathan Sreetharan
 இராமநாதன் சிறிதரன்

தேர்தல் தொகுதி 3

Basel, Aargau, Jura - 1 பிரதிநிதி

Mahalingam  Baskaralingam -  மகாலிங்கம் பாஸ்கரலிங்கம்

தேர்தல் தொகுதி 4

Luzern, Zug, Nidwalden, Obwalden, Schwyz, Uri -1 பிரதிநிதி

Kanapathipillai Uruthiran    கணபதிப்பிள்ளை ருத்திரன்
Balachandran  Amuthakaran பாலச்சந்திரன் அமுதகரன்
Balan  Sivapatham   பாலன் சிவபாதம்

தேர்தல் தொகுதி 5

Vaud, Valais, Genève, Fribourg, Neuchâtel-     2 பிரதிநிதிகள்

Sinnathambi  Rajanidevi  சின்னத்தம்பி ரஜனிதேவி
Murugaiah  Suginthan
  முருகையா சுகிந்தன்

தேர்தல் தொகுதி 6

Graubünden, Glarus, St.-Gallen, Apenzeller-   1 பிரதிநிதி

Muthukumar Soundarajah முத்துக்குமார் சௌந்தர்ராஜா
Sivarajah  Srisajeetha
   சிவராஜா சிறிசயீதா

தேர்தல் தொகுதி 7

Tessin / Ticino -    1 பிரதிநிதி

Arulanandam  Deivendran அருளானந்தம் தெய்வேந்திரன்
Sellathurai   Mahendrapillai செல்லத்துரை மகேந்திரபிள்ளை

வெளியீடு:
அனைத்துலகச் செயலகம்
தொடர்புகளுக்கு:
info@govtamileelam.org 
 

 

 

 

 

 

Design by tgte team