வாக்காளர் நிபந்தனைகள்
வாக்காளருக்கான தகுதி ...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
முதலாவது அரசவைக்கான பிரதிநிதிகளினைத் தெரிவுசெய்யும்
தேர்தலில் வாக்களிக்க விரும்பும் ஒருவர் குறிப்பிட்ட
தேர்தல் நடைபெறும் நாளன்று தனது வயதின் 17வது ஆண்டினைப்
பூர்த்தி செய்திருக்கவேண்டும்.
வாக்காளர் ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம்,
திருமணம், தத்தெடுத்தல் ஊடாக இணைந்தவர்களாக இருக்கவேண்டும்.
வாக்காளர் சுவிசை வாழ்விடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
வாக்காளர் தான் வாழும் தேர்தல் தொகுதியில் மட்டுமே அவர்
வாக்களிக்க முடியும்.
வாக்குச்சாவடியில் தன்னை
அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்கள் ...
- சுவிஸ் அடையாள அட்டை
- சுவிஸ் வதிவிட உரிமை அடையாள அட்டை
- சுவிஸ்; வெளிநாட்டவர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள
வேறு ஆவணங்கள்
வாக்குச்சாவடியில் தனது
வதிவிடத்தை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்கள் ...
வாக்களிக்கச் செல்லும்
வாக்குச்சாவடியுள்ள தேர்தல் தொகுதியில் வாழும் முகவரியை
அத்தாட்சிப்படுத்தும் ஏதாவது ஒரு ஆவணம்.
வாக்காளர் ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம்,
திருமணம், தத்தெடுத்தல் ஊடாக இணைந்தவர்களாக அதற்கான
ஆவணத்தை அத்தாட்சிபடுதவேண்டும்.
தேர்தல் தொகுதிகள் ...
தேர்தல் தொகுதி 1 – Bern, Solothurn - 2 பிரதிநிதிகள்
வாக்காளர்
ஆகக் கூடியது இரு வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்கலாம்.
மீறின் வாக்குச்சீட்டுச் செல்லாது.
தேர்தல் தொகுதி 2 -Zurich, Schaufhausen, Thurgau - 2 பிரதிநிதிகள்
வாக்காளர்
ஆகக் கூடியது இரு வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்கலாம்.
மீறின் வாக்குச்சீட்டுச் செல்லாது.
தேர்தல் தொகுதி 4 - Luzern,Zug, Nidwalden, Obwalden, Schwyz,Uri 1 பிரதிநிதி
வாக்காளர்
ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்கலாம். மீறின்
வாக்குச்சீட்டுச் செல்லாது.
தேர்தல் தொகுதி 6 - Graubünden, Glarus, St.-Gallen, Appenzeller 1 பிரதிநிதி
வாக்காளர்
ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்கலாம். மீறின்
வாக்குச்சீட்டுச் செல்லாது.
தேர்தல் தொகுதி 7 - Tessin / Ticino - 1 பிரதிநிதி
வாக்காளர் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்கலாம். மீறின் வாக்குச்சீட்டுச் செல்லாது.



